தனுஷ் படத்துக்கும் ‘பொறியாள’னுக்கும் சம்பந்தமில்லை! - வேல்ராஜ்

தனுஷ் படத்துக்கும் ‘பொறியாள’னுக்கும் சம்பந்தமில்லை! - வேல்ராஜ்

செய்திகள் 7-Aug-2014 10:29 AM IST Inian கருத்துக்கள்

ஏஸ் மாஸ் மீடியாஸும், வெற்றிமாரனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியும் இணைந்து உருவாக்கும் படம் ‘பொறியாளன்’. இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். கதாநாயகியாக ரக்‌ஷிதா அறிமுகமாகிறார். இவர் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கயல்’ படத்திலும், சற்குனம் இயக்கும் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. எஞ்சினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் ஒரு துடிப்பு மிக்க இளைஞன், கட்டுமானப் பணியில் உலக சாதனை படைக்கத் துடிக்கிறார். அவனுக்கு கட்டுமானப்பணியில் எதிரிகளால் நிறைய சிக்கல்கள் ஏற்படுகிறது. அந்த சிக்கல்களை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பதே படத்தின் கதை. வெற்றிமாறனிடம் உதவியாளர்களாக இருந்த மணிமாறன் கதை, திரைக்கதை எழுத, தாணுகுமார் இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிபதிவு செய்துள்ளார். ‘டாப் 10 சினிமா’ நடத்திய குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற ‘குரங்கு’ குறும்படம் உள்ளிட்ட பல குறும்படங்களுக்கு இசயைமைத்த எம்.எஸ்.ஜோன்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படம் பற்றி வேல்ராஜ் பேசும்போது, ‘‘இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது அதனால் நானே இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய முன் வந்தேன். ‘பொறியாள’னுக்கும், ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை! சமூகத்துக்கு ஒரு சின்ன மெசேஜ் சொல்லும் படம் இது. இப்படம் நன்றாக வந்துள்ளது’’ என்றார்.

முன்னதாக பேசிய வெற்றிமாறன், ‘‘படம் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. ஒரு சின்ன பட்ஜெட்டில் வந்திருக்கும் நல்ல படத்தை தயாரித்ததில் சந்தோஷமாக இருக்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;