அசின் உடல், உறுப்புகள் தானம்!

அசின் உடல், உறுப்புகள் தானம்!

செய்திகள் 7-Aug-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்ற நடிகை அசின் இப்போது மும்பையிலேயே செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் நடித்து வரும் படம் ’ஆல் ஈஸ் வெல்’. நல்ல கதை அமைந்தால் தமிழ் படங்களிலும் நடிக்க தயாராக இருக்கும் அசின் படங்களில் நடித்துக் கொண்டே சில சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். நேற்று மும்பையில் ஒரு சமூக அமைப்பு சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமில் நடிகை அசின் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தார். இதனை தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை இப்போது செய்கிறேன்’’ என்று கூறி, அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். தொடர்ந்து பேசிய அசின், ‘‘என் நடவடிக்கைகள் மற்றவர்களையும் இதுபோல் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’’ என்றும் கூறினார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;