வெள்ளி முதல் ‘அஞ்சான்’ புதிய டிரைலர்!

வெள்ளி முதல் ‘அஞ்சான்’ புதிய டிரைலர்!

செய்திகள் 6-Aug-2014 4:10 PM IST VRC கருத்துக்கள்

சூர்யா - லிங்குசாமி டீமின் ‘அஞ்சான்’ படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாவதையொட்டி படத்தின் புரொமோஷன் வேலைகளும் சூடு பிடித்துள்ளது. ஏற்கெனவே அஞ்சானின் டிரைலர் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, இன்னொரு புதிய டிரைலர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 8-ஆம் தேதி) வெளியாகவுள்ளது. ‘அஞ்சானி’ன் இந்த புதிய டிரைலர் 8-ஆம் தேதி காலை 9 மணிக்கு முதன் முதலாக சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை தொடர்ந்து காலை 10.10 மணிக்கு யு-ட்யூபிலும் வெளியாகும் இந்த புதிய டிரைலர் மற்ற டி.வி.சேனல்களிலும், தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களிலும் காண்பிக்கப்படவுள்ளது. ‘அஞ்சான்’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;