பீகாரில் விஷால் – ஸ்ருதிஹாசன்!

பீகாரில் விஷால் – ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 6-Aug-2014 11:59 AM IST VRC கருத்துக்கள்

‘தாமிரபரணி’ படத்தை தொடர்ந்து ஹரி - விஷால் கூட்டணி அமைத்துள்ள ‘பூஜை’ படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்காக அதி பயங்கர சேஸிங் மற்றும் சண்டை காட்சி ஒன்றை பீகாரில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக விஷால், ஸ்ருதிஹாசன், இயக்குனர் ஹரி ஆகியோர் அடங்கிய படக்குழுவினர் பீகார் சென்றுள்ளனர். அங்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். இந்தப் படப்பிடிப்பில் பீகாரை சேர்ந்த நிஜ அரசியல் வாதி ஒருவரும் நடிக்க இருக்கிறாராம்! இங்கு நடைபெறும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பை தொடர்ந்து பாடல்களை படமாக்க சுவிட்சர்லாந்த் செல்லவிருக்கிறது ‘பூஜை’ டீம். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். தீபாவளி வெளியீடாக ‘பூஜை’ திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;