ஒரு காட்சியில் நடித்து நாயகன், நாயகி ஆனவர்கள்!

ஒரு காட்சியில் நடித்து நாயகன், நாயகி ஆனவர்கள்!

செய்திகள் 6-Aug-2014 11:37 AM IST Inian கருத்துக்கள்

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ திருட்டுக்கல்யாணம்’. இப்படத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்த ரங்காயாழி கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘மூடர்கூடம்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்த தேஜஸ்வீ கதாநாயகியாகம் அறிமுகமாகிறார். இவர்களுடன், ‘ஆடுகளம்’ நரேன், ‘பசங்க’ செந்தில், தம்பி ராமையா, தேவதர்ஷினி நடிக்க, இயக்குனர் ஏ.வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கே.பாக்யராஜ், சசி ஆகியோர்களிடம் பணிபுரிந்த ஷக்திவேலன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குனர் ஷக்திவேலன் கூறியதாவது, ‘‘திருட்டுக்கல்யானம் பண்ணிக்கிறோமா, திருக்கல்யாணம் பண்ணிக்கிறோமா என்பது முக்கியமல்ல. கல்யாணம் பண்ணிக்கிறதும் சந்தோஷமா வாழ்றதும் தான் முக்கியம் என்ற கருத்தை மையமாக வைத்துதான் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக டெஸ்ட் ஷூட் பண்ணும்போதே படத்திற்க்காக பேசப்பட்ட முழு தொகையையும் பெற்றுக் கொண்ட நாயகன், நாயகி இவர்களாகத்தான் இருப்பார்கள். படத்தின் படப்பிடிப்பு கோவை, கடலூர், சென்னையை தொடர்ந்து கடப்பாவிலும் நடைபெற்றுக் கொண்டிருகிறது’’ என்றார் இயக்குனர் ஷக்திவேலன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - லவ் என்றவன் பாடல் வீடியோ


;