மதுரை கருப்பசாமி கோவிலில் 'ஜிகர்தண்டா' டீம்!

மதுரை கருப்பசாமி கோவிலில் 'ஜிகர்தண்டா' டீம்!

செய்திகள் 6-Aug-2014 11:25 AM IST Inian கருத்துக்கள்

‘பீட்சா’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக்சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா’. இப்படம் மதுரையை கதைக்களமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கேங்ஸ்டர் படம். கடந்த வாரம் வெளியான இப்படத்தை பார்த்த ‘பிரம்மாண்ட பட’ இயக்குனர் ஷங்கர் பாராட்டு தெரிவித்திருந்தார். அத்துடன் ரசிகர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ‘ஜிகர்தண்டா’ படக்குழுவினர் மதுரையில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். படத்தின் வெற்றியை கொண்டாடும் பொருட்டு, படக்குழுவினர் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோவிலில் பொங்கல் படையலிட்டு சாமி கும்பிட்டனர். முன்னதாக தியேட்டர்களுக்கு சென்ற சிம்ஹா ரசிகர்களின் அன்பு பிடியில் சிக்கினார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;