சூர்யாவுடன் 7, நயன்தாராவுடன் 8

சூர்யாவுடன் 7, நயன்தாராவுடன் 8

செய்திகள் 6-Aug-2014 10:49 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கிய அத்தனைப் படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைப்பாளர்! வெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான ‘சென்னை 600028’ படத்திலிருந்து துவங்கி அவர் இயக்கிய ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’ வரையிலான 5 படங்களுக்கு இசை அமைத்த யுவன், இப்போது 6-ஆவது படமாக வெங்கட் பிரபு இயக்கும் சூர்யாவின் ‘மாஸ்’ படத்திற்கு இசை அமைக்கிறார். அது மாதிரி சூர்யா நடிப்பில் யுவன் இசை அமைக்கும் 7-ஆவது படம் ‘மாஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடித்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்திலிருந்து துவங்கி, ‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’, ‘பேரழகன்’, ‘வேல்’, ‘அஞ்சான்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த யுவன் சூர்யா நடிப்பில் இசை அமைக்கும் 7 ஆவது படம் ‘மாஸ்’. இதைப் போலவே நயன்தாரா நடிப்பில் யுவன் இசை அமைக்கும் 8-ஆவது படம் ‘மாஸ்’. நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’, ‘வல்லவன்’, ‘பில்லா’, ‘யாரடி நீ மோகினி’, ‘அனேகன்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஆரம்பம்’ படங்களை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் ‘மாஸ்’ படத்திற்கும் இசை அமைப்பாளர் யுவன் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;