அரவிந்த் சாமி இல்லையாம், வம்சி கிருஷ்ணாவாம்!

அரவிந்த் சாமி இல்லையாம், வம்சி கிருஷ்ணாவாம்!

செய்திகள் 5-Aug-2014 2:37 PM IST VRC கருத்துக்கள்

‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, சுராஜ் இயக்கும் பெயரிடப்படாத படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ‘ஜெயம்’ ரவி. இதில் ‘ஜெயம்’ ரவியின் அண்ணன் ‘ஜெயம்’ ராஜா இயக்கி வரும் ’தனி ஒருவன்’ படத்தில் ரவிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவில்லையாம்! வேறொரு முக்கியமான கேரக்டரில் தான் நடிக்கிறாராம்! அப்படியென்றால் வில்லனாக நடிப்பது யாராம்? ‘இவன் வேற மாதிரி’, ‘மான் கராத்தே’ படங்களில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணாவாம்! ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடி ஹன்சிகா மோத்வானி என்றால், ‘தனி ஒருவன்’ படத்தில் ரவிக்கு ஜோடி நயன்தாரா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;