சிப்பாய், இவன் வேற மாதிரி - ஒரே கதையா?

சிப்பாய்,  இவன் வேற மாதிரி - ஒரே கதையா?

செய்திகள் 5-Aug-2014 2:28 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள படம் ‘சிப்பாய்’. ‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கியுள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் எப்போதோ முடிந்துவிட்டது. இப்படம், சட்டக்கல்லூரி மாணவர்கள் பற்றிய கதையை கொண்டது என்றும் சமீபத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்தப் படம் ரிலீசாக இருந்த நேரத்தில் தான் விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படம் வெளியானது. இப்படமும் சட்டக்கல்லூரி மாணவன் சம்பந்தமான கதையாக அமைந்திருந்து ஆனால் சரவணன் இயக்கியுள்ள ‘சிப்பாய்’ படம், விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையை கொண்டது என்கிறார்கள். இதனால் ‘சிப்பாய்’ படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;