சரணின் இளமைத்திருவிழா!

சரணின் இளமைத்திருவிழா!

செய்திகள் 5-Aug-2014 11:23 AM IST Inian கருத்துக்கள்

‘லிங்கா’, ‘உத்தமவில்லன்’, ‘அஞ்சான்’ என இரட்டை வேடப் படங்கள் கோலிவுட்டை ஆக்கிரமித்து வரும் இவ்வேளையில் தன் பங்குக்கு ஒரு இரட்டை வேடப் படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் சரண். ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’, ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த சரண், அடுத்து இயக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’. இப்படத்தில் வினய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். வினயுடன் இணைந்து நடிக்க லட்டு.. லட்டான.. மூன்று அழகிகளை வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் இயக்குனர் சரண். சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா, கேஷா கம்பட்டி என்ற மூன்று கதாநாயகிகளையும் ‘காதல் மன்னன்’ படத்தில் அறிமுகமான மானு அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து சரண் பேசும்போது,

‘‘வெற்றி தோல்வியைத் தாண்டி ரசிகர்கள் ரசிக்கும் படியான படங்களாகத்தான் இதுவரை கொடுத்துள்ளேன். இந்தப் படமும் அதேபோல் தான் இருக்கும். இரட்டை வேடப் படங்களில் காணப்படும் ஒரே மாதிரியான காட்சிகள் இதில் இடம் பெறாது. அதை தவிர்த்து சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஒரு இளமைத்திருவிழா படமாக இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;