வைபவ், லாவண்யாவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர்!

வைபவ், லாவண்யாவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர்!

செய்திகள் 5-Aug-2014 10:08 AM IST VRC கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘அரிமா நமிபி’ ஆனந்த் ஆகியோர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பாசறையில் இருந்து வந்தவர்கள். இவர்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் இன்னொரு உதவி இயக்குனரான ராஜுவும் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘கணபதி கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இவரும் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரிடம் உதவியாளராக இருந்த ஜெயபிரகாஷ் ஏற்றிருக்கிறார். மரகதமணி இசை அமைக்கிறா. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் விரைவில் நடிபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - ட்ரைலர்


;