சூர்யாவின் அடுத்த இயக்குனர்?

சூர்யாவின் அடுத்த இயக்குனர்?

செய்திகள் 4-Aug-2014 5:58 PM IST VRC கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படம் முடிந்ததும், விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான ‘2டி’ தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக பாண்டிராஜ் இயக்கத்தில் இப்போது ஒரு படம் உருவாகி வருகிறது. இரண்டாவது படமாக விக்ரம் குமார் இயக்கும் படத்தை தயாரித்து நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த தகவலை ‘2டி’ நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ படத்தை இயக்கிய விக்ரம் குமார், சமீபத்தில் தெலுங்கில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்களை நடிக்க வைத்து இயக்கிய ‘மனம்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, எல்லோராலும் நல்ல படம் என்ற பாராட்டும் பெற்றிருந்தது. சூர்யா, விக்ரம் குமார் முதன் முதலாக இணையும் படத்தின் படப்பிடிப்பு சூர்யாவின் ‘மாஸ்’ படம் முடிந்ததும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;