ஷிமோகாவில் ‘லிங்கா’ க்ளைமேக்ஸ்!

ஷிமோகாவில் ‘லிங்கா’ க்ளைமேக்ஸ்!

செய்திகள் 4-Aug-2014 12:35 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. மைசூரை தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்து வந்த ‘லிங்கா’வின் படப்பிடிப்பு இப்போது ஒரு பிரேக் எடுத்துக்கொண்டுள்ளது. இப்படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக இம்மாதம் 18-ஆம் தேதி ஷிமோகா புறப்படவிருக்கின்றனர் ‘லிங்கா’ படக்குழுவினர். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அங்கு படமாகிறதாம்! கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘லிங்கா’வில் ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ‘லிங்கா’வை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர் ‘லிங்கா’ டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;