‘ஜிகர்தண்டா’வுக்கு ஷங்கர் பாராட்டு!

‘ஜிகர்தண்டா’வுக்கு ஷங்கர் பாராட்டு!

செய்திகள் 4-Aug-2014 11:56 AM IST VRC கருத்துக்கள்

கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகி பலதரப்பட்ட விமர்சனங்கள் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் படம் ’ஜிகர்தண்டா’. கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பேசப்படும் ஷங்கர் ‘ஜிகர்தண்டா’ படத்தை பார்த்து, ‘‘எதிர்பாராத திருப்பங்கள், த்ரில், காமெடி கலந்த எக்சலன்ட் படம்! படத்தில் அனைவரது பர்ஃபார்மன்ஸும் சூப்பர்! கார்த்திக் சுப்பராஜின் எக்சலன்ட் ஸ்கிரிப்ட்! ‘ஜிகர்தண்டா’ புதிய அனுபவமாக இருந்தது’’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘ஜிகர்தண்டா’வுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது மாதிரி படங்களை பார்த்து அதிகமாக கருத்து சொல்லாமல் இருந்து வந்த ஷங்கர், சமீபத்தில் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை பார்த்தும் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - ட்ரைலர்


;