கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

Rosaiah felicitated Kamal Hassan

செய்திகள் 4-Aug-2014 11:30 AM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் சோழா நாச்சியார் ஃபவுன்டேஷன் இணைந்து சென்னையில் நடத்தப்பட்ட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. தமிழக ஆளுனர் ரோசய்யா தலைமையில் நடந்த இவ்விழாவில் கமல்ஹாசனுக்கு இவ்விருதை ஆளுனர் ரோசய்யா வழங்கினார். அப்போது விருதுபெற்றுக்கொண்டு பேசிய கமல்ஹாசன் ‘‘இது மறக்க முடியாத ஒரு தருணம்! இந்த நேரத்தில் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய மலையாள சினிமாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்’’ என்று கூறினார். இந்த விழா கடந்த சனிக் கிழமையன்று சென்னையில் நடந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;