‘மங்காத்தா’வுக்கு பிறகு மீண்டும் அஞ்சலி - த்ரிஷா!

‘மங்காத்தா’வுக்கு பிறகு மீண்டும் அஞ்சலி - த்ரிஷா!

செய்திகள் 4-Aug-2014 11:04 AM IST VRC கருத்துக்கள்

’ஜெயம்’ ரவியுடன் ’பூலோகம்’ படத்தில் இணைந்து நடித்த த்ரிஷா, தற்போது சுராஜ் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்திலும் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாகிறார். இந்தப் படத்தில் 'ஜெயம்' ரவியுடன் அஞ்சலி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அஞ்சலியின் கேரக்டர் தவிர படத்தில் மற்றுமொரு முக்கிய ஹீரோயின் கேரக்டர் இருப்பதாக கூறப்பட்டது. இந்த கேரக்டரில் முதலில் ‘மெட்ராஸ்’ பட ஹீரோயின் கேத்ரின் தெரெசா நடிக்க இருக்கிறார் என்று கூறபட்டது. ஆனால் இப்போது அந்த கேரக்டருக்கு த்ரிஷா ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கெனவே அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தில் அஞ்சலியும், த்ரிஷாவும் இணைந்து நடித்துள்ளனர். அந்த படத்தை தொடர்ந்து இப்போது ‘ஜெயம்’ ரவி படத்தில் இருவரும் இணைகின்றனர். ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் 10-ஆம் தேதிக்கு பிறகு சென்னையில் நடக்க இருக்கிறதாம்! கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் த்ரிஷா அஜித்துக்கு மனைவியாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;