தனுஷை இயக்கும் ‘எதிர்நீச்சல்’ இயக்குனர்!

தனுஷை இயக்கும் ‘எதிர்நீச்சல்’ இயக்குனர்!

செய்திகள் 4-Aug-2014 10:39 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயனை வைத்து இப்போது இயக்கி வரும் ‘டாணா’ படத்தை முடித்ததும், தனுஷை இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தனுஷ் தற்போது நடித்து வரும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இதனை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் நடிக்கும் ‘ஷமிதாப்’ ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களின் வேலைகள் முடிந்ததும் துரை செந்தில்குமாருடன் இணைய இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தை ஏற்கெனவே தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்களை தயாரித்த ‘குரூப் கம்பெனி’ கதிரேசன் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது. துரை செந்தில்குமார் இயக்கிய முதல் படமான ‘எதிர்நீச்சல்’ படத்தை தயாரித்தவர் தனுஷ் என்பது எல்லோருக்கும் தெரியுமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டிரைலர்


;