ரீ-மேக் ஆகும் மூன்று முகம்!

ரீ-மேக் ஆகும் மூன்று முகம்!

செய்திகள் 4-Aug-2014 10:19 AM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடிப்பில் 30 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மூன்று முகம்’. இந்தப் படத்தை மீண்டும் தமிழில் ரீ-மேக் செய்கிறார் ‘குரூப் கம்பெனி’ கதிரேசன். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா’, தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘நய்யாண்டி’ உட்பட பல படங்களை தயாரித்தவர் கதிரேசன். ‘மூன்று முகம்’ படத்தை அப்போது ஆர்.எம்.வீரப்பனின் 'சத்யா மூவீஸ்' நிறுவனம் தயாரிக்க, ஏ.ஜெகநாதன் இயக்கியிருந்தார். இப்போது அந்த நிறுவனத்தினரிடம் பிரத்தியேக அனுமதி பெற்று, ‘மூன்று முகம்’ படத்தை தயாரிக்கிறார் கதிரேசன். இப்படத்திற்கான இயக்குனர், நடிகர்- நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;