பிரசாந்துடன் ‘சாகசம்’ செய்யும் நர்கிஸ் ஃபக்ரி!

பிரசாந்துடன் ‘சாகசம்’ செய்யும் நர்கிஸ் ஃபக்ரி!

செய்திகள் 2-Aug-2014 12:17 PM IST VRC கருத்துக்கள்

பிரசாந்த் நடிக்கும் ‘சாகசம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு ஐட்டம் சாங்கில் பிரசாந்துடன் பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி நடனம் ஆடுகிறார். ரண்பீர் கபூர் நடித்த ‘ராக்ஸ்டார்’ எனும் ஹிட் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நர்கிஸ் ஃபக்ரி. சமீபத்தில் வெளியான சல்மான்கானின் ‘கிக்’ படத்திலும் ’கிக்’ ஆன ஒரு ஐட்டம் சங்கில் ஆடியிருக்கிறார் நர்கிஸ். ‘சாகசம்’ படத்திற்காக பிரசாந்த் – நர்கிஸ் ஆடும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் பாடல் காட்சியில் பிரசாந்த் - நர்கிஸுடன் 50 ரஷ்ய நடன அழகிகளும். 100 ஆண் நடன கலைஞர்களும் பங்கேற்று நடனம் ஆடுகிறார்கள். இதற்காக கலை இயக்குனர் மிலன் பிரம்மாண்ட அரங்கம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த அரங்கம் கண்ணைக் கவரும் விதம் பிரத்தியேக லைட்டிங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தமன் இசையில், மதன் கார்க்கி எழுதியுள்ள ’காரத்தில் காரத்தில் சில்லி…’ என்று வரும் பாடலுக்கு, ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, சௌந்தர் ஒளிப்பதிவில் படமாகி வருகிறது இந்த ஐட்டம் சாங்! இந்த ஐட்டம் சாங் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பேசப்படும் பாடலாக அமையும் என்கின்றனர் ‘சாகசம்’ படக்குழுவினர். பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் எனபதை விரைவில் அறிவிக்க உள்ளனர் ‘சாகசம்’ டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பின் கொடி லிரிக் வீடியோ பாடல் - அருவி


;