சமுத்திரக்கனி, தன்ஷிகா இணையும் ‘கிட்ணா’

சமுத்திரக்கனி, தன்ஷிகா இணையும் ‘கிட்ணா’

செய்திகள் 2-Aug-2014 10:46 AM IST VRC கருத்துக்கள்

‘நிமிர்ந்து நில்’ படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கும் படத்திற்கு ‘கிட்னா’ என்று டைடில் வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’யில் தனுஷின் தந்தையாக நடித்த சமுத்திரக்கனி, மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் நடித்து முடித்ததும், அதாவது அக்டோபர் மாதம் ‘கிட்னா’ படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் சமுத்திரக்கனி! கிருஷ்ணா என்பதன் சுருக்கமாக ‘கிட்னா’ என்று பெயர் வைத்திருக்கும் இப்படம் நான்கு கால்கட்டங்களில் நடப்பது மாதிரி கதையாம். இந்தப் படத்தை இயக்குவதோடு, படத்தின் முக்கிய ஒரு கேரக்டரிலும் நடிக்கிறாராம் சமுத்திரக்கனி. இந்தப் படத்தில் தன்ஷிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு இதில் மாறுபட்ட கேரக்டர் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏமாளி - டீசர்


;