டிவிடி வந்தும், தியேட்டரில் ஓடும் திருசியம்!

டிவிடி வந்தும், தியேட்டரில் ஓடும் திருசியம்!

செய்திகள் 1-Aug-2014 10:49 AM IST VRC கருத்துக்கள்

ஒரு படம் மாபெரும் வெற்றி பெறுவதற்கு, கதை நன்றாக இருந்தால் போதும், மொழி ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளது சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘திருசியம்’ மலையாள படம்! கடந்த ஆண்டு டிசம்பர் 20 –ஆம் தேதி வெளியான இப்படம் இன்னமும் புது தில்லியின் இரண்டு தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வமான டிவிடி வெளிவந்துள்ள நிலையில்! ‘திருசியம்’ கன்னடத்திலும், தெலுங்கிலும் ரீ-மேக் ஆகி அங்கும் ஹிட் அடித்துள்ள நிலையில், அடுத்து தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்களின் பாதுகாப்பு சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘திருசியம்’ எல்லா மொழிக்கும் பொருத்தமான ஒரு சப்ஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டிரைலர்


;