‘ஈரம்’ வில்லனுடன் இணையும் நட்ராஜ்!

‘ஈரம்’ வில்லனுடன் இணையும் நட்ராஜ்!

செய்திகள் 1-Aug-2014 10:14 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி ‘வித்தியாசமான படம்’ என்ற பாராட்டுக்களோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சதுரங்கவேட்டை’. இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பவர் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் சுப்பிரமணியன். ‘சதுரங்க வேட்டை’யின் வெற்றியை தொடர்ந்து நட்ராஜ் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘கதம் கதம்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் ‘ஈரம்’ படத்தில் வில்லனாக நடித்த நந்தாவும் முக்கிய ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார். படத்தில் இவர்கள் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்களாம். ‘கத்தி’ படத்தை தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பவரும் நட்ராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;