யு-டியூப் சாதனை : கோச்சடையானுக்குப் பிறகு ‘அஞ்சான்’

யு-டியூப் சாதனை : கோச்சடையானுக்குப் பிறகு ‘அஞ்சான்’

செய்திகள் 1-Aug-2014 10:09 AM IST Chandru கருத்துக்கள்

‘சிக்கந்தர்’ தெலுங்கு டப்பிங்கின் ஆடியோ விழாவை நேற்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ள சந்தோஷத்தில் இருக்கும் ‘அஞ்சான்’ டீமை மேலும் குஷிப்படுத்தியுள்ளது ‘அஞ்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் சாதனை. அதாவது கடந்த ஜூலை 5ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘அஞ்சான்’ டீஸரை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர். அதுவும் இந்த வருடத்தில் வெளியான தமிழ்ப்பட டீஸர் மற்றும் டிரைலர்களில் ‘கோச்சடையான்’ படத்திற்கு அடுத்தபடியாக ‘அஞ்சான்’ டீஸரையே அதிக ரசிகர்கள் பார்த்துள்ளனர் என்பது இன்னுமொரு சாதனை. வருட ஆரம்பத்தில் வெளியான ‘ஜில்லா’ ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இதுவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதேபோல் ரஜினியின் ‘கோச்சடையான்’ டிரைலரை இதுவரை 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’யை 24 லட்சத்திற்கு மேற்பட்டோரும், இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான விஜய்யின் ‘கத்தி’ மோஷன் போஸ்டரை 18 லட்சத்திற்கு மேற்பட்டோரும் கண்டுகளித்துள்ளனர். இந்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது ‘கோச்சடையான்’ படம் முதல் இடத்தையும், ‘அஞ்சான்’ படம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனால் வரும் 15ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;