அஜித் - ஷங்கர் கூட்டணி : நிஜ நிலவரம்

அஜித் - ஷங்கர் கூட்டணி : நிஜ நிலவரம்

செய்திகள் 1-Aug-2014 9:10 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்தும், விக்ரமின் ‘ஐ’ படத்தில் ஷங்கரும் தற்போது பிஸியாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். இதில் ‘அஜித் 55’ படம் தற்போதுதான் பாதி கிணறையே தாண்டியுள்ளது. இன்னும் பாதிக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு வேலைகள் மீதம் இருக்கின்றன. ஆனால், ஷங்கரின் ‘ஐ’ படம் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கின்றன. அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கௌதம் படத்தை முடித்ததும், அடுத்ததாக பிவிபி சினிமா நிறுவனத்திற்காக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘ஐ’ படத்திற்குப் பிறகு ஷங்கர், ரஜியை வைத்து ‘எந்திரன் 2’வை 200 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில், ‘எந்திரன் 2’வை கிடப்பில் போட்டுவிட்டு, ஷங்கர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அஜித்தான் ஹீரோ என தற்போது வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இதுபோல் செய்திகள் வருவது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு முறை ஷங்கர், அவருடைய படத்தை முடித்ததும் அடுத்ததாக அஜித்துடன்தான் கூட்டணி சேருவார் என செய்திகள் பரவுவது வாடிக்கைதான். இந்த முறையும் அந்த கதைதான் நடந்து கொண்டிருக்கிறது. இருவரும் கூட்டணி வைப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், தங்கள் ‘தல’யை வைத்து ஷங்கர் படமெடுக்கப் போகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என ஷங்கரிடம் நேரடியாகவே கேள்வியைக் கேட்டுவிட்டார் அஜித் ரசிகர் ஒருவர். அதாவது, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தைப் பார்த்துவிட்டு தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அப்படத்தைப் பாராட்டி கருத்துத் தெரிவித்திருந்தார் இயக்குனர் ஷங்கர். இதன் ‘கமென்ட்’ பகுதியில் அஜித் ரசிகர் ஒருவர், ‘‘எங்கள் ‘தல’யை வைத்து நீங்கள் படம் இயக்குவதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையா? எஸ்? ஆர் நோ?’’ என கமென்ட் செய்தார். அதற்கு ‘‘நோ’’ என்று பதில் கமென்ட் போட்டு இந்த விவாகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஷங்கர்.

இந்த விஷயத்தை ஷங்கர் தன்னுடைய ‘ஸ்டேட்டஸா’கவே போட்டிருந்தால், வீண் வதந்திகள் பரவுவது எப்போதோ தடைபட்டிருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;