‘ஜிகர்தண்டா’ இயக்குனரின் திடீர் வேண்டுகோள்!

‘ஜிகர்தண்டா’ இயக்குனரின் திடீர் வேண்டுகோள்!

செய்திகள் 31-Jul-2014 4:44 PM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள, ’ஜிகர்தண்டா’ படம் நாளை தமிழகமெங்கும் ரிலீசாகவிருக்கிற நிலையில் இப்படம் இந்திய நேரப்படி இன்னும் சில மணிநேரங்களில் வெளிநாடுகளில் ரிலீசாகவிருக்கிறது. இது குறித்து கார்த்திக் சுப்பராஜ் ட்விட்டர் மூலம் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அதில், ‘‘படத்தை பார்க்கும் அன்பு ரசிகர்களே, தயவு செய்து படத்தில் இடம்பெறும் திருப்பங்களையும், கதையையும் வெளிப்படுத்தாதீர்கள்! எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்’’ என்று கூறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் ’ஜிகர்தண்டா’ குறித்து ஹீரோ சித்தார்த் ட்வீட்டியிருப்பதில், ‘‘ஜிகர்தண்டா’ பைரசி சம்பந்தமான ஏதாவது தகவல் கிடைத்தால் உடனே எங்க டீமுக்கு தகவல் தெரிவியுங்கள், படத்தை தியேட்டரிலேயே பார்த்து ரசியுங்கள்’’ என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார். ‘ஜிகர்தண்டா’ சித்தார்த்தின் 21-ஆவது படமாம்!.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;