விக்ரமுடன் இணையும் ‘அந்நியன்’ டி.டி.ஆர்!

விக்ரமுடன் இணையும் ‘அந்நியன்’ டி.டி.ஆர்!

செய்திகள் 31-Jul-2014 4:22 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தில், விக்ரம் பயணம் செய்யும் இரயிலில் டி.டி.ஆராக வந்து கலகலக்க வைப்பார் மனோபாலா! இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார் மனோபாலா. ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் தற்போது விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் அல்லவா? இந்த படத்தில் விக்ரமுடன் மனோபாலாவும் இணைந்து நடிக்கிறார். விக்ரமுடன் முதன் முதலாக சமந்தா இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு முதலில் ‘இடம் மாறி இறங்கியவன்’ என்றும், பிறகு ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற டைட்டில் வைத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தலைப்பை படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;