‘ஜில்லா’வுக்கு அடுத்து ஜிகர்தண்டா!

‘ஜில்லா’வுக்கு அடுத்து ஜிகர்தண்டா!

செய்திகள் 31-Jul-2014 3:23 PM IST VRC கருத்துக்கள்

இந்த வருடம் வெளியான படங்களிலேயே மிக நீளமான படம் விஜய் நடித்த, ‘ஜில்லா’ தான்! இப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும்! இந்தப் படத்தின் 100-ஆவது நாள் வெற்றி விழாவில் நடிகர் விஜய்யே படத்தின் அதிகபடியான நீளம் குறித்து பேசியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்நிலையில் நாளை ரிலீசாகவிருக்கிற கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா’ படமும் மிக நீளமான படமாம்! இப்படம் மொத்தம் 2 மணி 54 நிமிடங்கள் ஓடுமாம்! அதாவது இடைவேளை வரை 1 மணி 23 நிமிடமும், இடைவேளைக்குப் பிறகு 1 மணி 31 நிமிடங்களும் ஓடுமாம்! கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான ‘பீட்சா’ படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சர்டிஃபிகெட் தான் வழங்கியிருந்தார்கள். அதேபோல கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா’ படமும் யு/ஏ சர்ட்ஃபிகெட் தான் வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;