டபுள் சந்தோஷத்தில் லட்சுமி மேனன்!

டபுள் சந்தோஷத்தில் லட்சுமி மேனன்!

செய்திகள் 31-Jul-2014 1:32 PM IST VRC கருத்துக்கள்

சிறு வயதில், சித்தார்த் நடித்த ‘பாய்ஸ்’ படத்தை பார்த்து அவரது ரசிகையானவர் லட்சுமி மேனன். இதை அவர் ‘டாப் 10 சினிமா’வுக்கு அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ‘சிறு வயதில் நான் பார்த்து ரசித்த சித்தார்த்துடன் இப்போது ‘ஜிகர்தண்டா’வில் நடிப்பதை நினைக்கும்போது சர்ப்ரைசாக இருக்கிறது’’ என்றும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் லட்சுமி மேனன்! இப்படி தனது ஃபேவரிட் ஹீரோவுடன் லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ள ‘ஜிகர்தண்டா’ படம் நாளை பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசாகவிருக்கிறது. ‘ஜிகர்தண்டா’ ரிலீசாகிற சந்தோஷ தருணத்தில் இருக்கும் லட்சுமி மேனனுக்கு மற்றுமொரு சந்தோஷமாக அவர் மலையாளத்தில் நடித்துள்ள ‘அவதாரம்’ படமும் நாளை ரிலீசாகிறது! இப்படத்தை மலையாளத்தின் பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கியிருக்க, மலையாளத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான திலீபுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாவதால் ‘டபுள்’ சந்தோஷத்தில் இருக்கிறார் லட்சுமி மேனன்! நடிப்புடன் ‘ப்ளஸ் டூ’ படிப்பையும் தொடர்ந்து வரும் லட்சுமி மேனன் தற்போது நடிக்கும் படம் கார்த்தியின் ‘கொம்பன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;