‘விஐபி’யை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்!

‘விஐபி’யை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்!

செய்திகள் 31-Jul-2014 1:20 PM IST Chandru கருத்துக்கள்

இரண்டு வாரங்களாக தொடர்ந்து ‘கல்லா’ கட்டிக் கொண்டிருக்கும் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு திரையுலகத்திலும் பெரிய வரவேற்பும், பாராட்டும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. தற்போது ‘விஐபி’ படத்திற்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்திருக்கிறது. அது... தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனர் ஷங்கரின் பாராட்டுதான். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த ஷங்கர், மெய்மறந்து இப்படத்தை ரசித்திருக்கிறார். அதோடு இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

‘‘சமீபத்தில் ‘விஐபி’ படம் பார்த்தேன். ஒவ்வொரு சீனையும் மிகவும் ரசித்தேன். தனுஷின் ‘நச்’ பெர்ஃபாமென்ஸ், அனிருத்தின் ‘முறுக்’ மியூசிக், வேல்ராஜின் ‘வெல்டன்’ ஒர்க் என நீண்டநாட்கள் கழித்து அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் ஒரு படமாக வந்திருக்கிறது இப்படம்’’ என ‘ட்வீட்’ செய்திருக்கிறார் ஷங்கர்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ


;