டாப்சியின் 4-ஆவது ஹிந்திப் படம்!

டாப்சியின் 4-ஆவது ஹிந்திப் படம்!

செய்திகள் 31-Jul-2014 1:07 PM IST VRC கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘முனி 3 கங்கா’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும், ‘வை ராஜா வை', பார்த்திபனின் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' ஆகிய படங்களில் நடித்து வரும் டாப்சி அடுத்து 'ஹமாரா பஜாஜ்' என்ற ஹிந்திப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஷுஜித் சர்கார் இயக்கும் இப்படத்தில் கதையின் நாயகி டாப்சி தானாம்! கதையின் நாயகனாக ‘விக்கி டானர்’ படத்தில் ஹீரோவாக நடித்த ஆயுஷ்மான் குரானா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மும்பையில் துவங்கவிருக்கிறது. டாப்சி ஏற்கெனவே ‘கேஷ்மி பட்டூர்’, ‘ரன்னிங் ஷாதி டாட் காம்’ என இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். இப்போது அக்‌ஷய்குமருடன் நீரஜ்பாண்டே இயக்கத்தில் ‘பேபி’ என்ற படத்தில் நடித்து வரும் டாப்சியின் நான்காவது படம் ‘ஹமாரா பஜாஜ்’. இந்தப் படம் தவிர தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்படவிருக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறாராம் டாப்சி! இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார் டாப்சி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;