‘வைகோ ஐயாவை சந்திக்கப்போகிறோம்’ - ஏ.ஆர்.முருகதாஸ்

‘வைகோ ஐயாவை சந்திக்கப்போகிறோம்’ - ஏ.ஆர்.முருகதாஸ்

செய்திகள் 31-Jul-2014 11:10 AM IST Chandru கருத்துக்கள்

வழக்கமாக பட ரிலீஸின்போதுதான் ஏதாவது பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து அதனால் ரிலீஸில் சிக்கல்கள் ஏற்படும். ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு படம் ஆரம்பித்த தருணத்தில் இருந்தே சில பிரச்சனைகள் வெடித்திருக்கின்றன. அதாவது இப்படத்தைத் தயாரிக்கும் ‘லைகா இன்டர்நேஷனல்’ நிறுவனத்திற்கு ராஜபக்ஷேவுடன் தொடர்பிருப்பதாகக் கூறி சில பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்தன. தற்போது இந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ‘கத்தி’ டீம் களத்தில் இறங்கியிருப்பது ட்விட்டரில் முருகதாஸ் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களின் மூலம் தெரிய வருகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘ட்வீட்’ இதோ.... ‘‘தயாரிப்பாளர் கருணாவோடு நெடுமாறன் ஐயா, திருமா அண்ணா, சீமான் அண்ணா வை சந்தித்தோம், விளக்கம் அளிக்கப்பட்டது , வைகோ ஐயாவை சந்திக்க இருக்கிறோம்!’’ என அதில் பதிவாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;