மீண்டும் இணையும் ‘வடகறி’ டீம்!

மீண்டும் இணையும்  ‘வடகறி’ டீம்!

செய்திகள் 31-Jul-2014 10:46 AM IST VRC கருத்துக்கள்

‘வடகறி’ படத்தை இயக்கிய சரவணராஜன் அடுத்து இயக்கும் படத்திலும் ஜெய் தான் ஹீரோவாம்! ரொமான்டிக் ஆக்‌ஷன் காதல் கதையாக ‘வடகறி’யை இயக்கிய சரவணராஜன் அடுத்து இயக்கும் படத்தில் தமிழ்நாடு - கேரளா எல்லை பின்னணியில் நடக்கும் காதல் கதையை படமாக்க இருக்கிறாராம். இந்தப் படத்தில், ஜெய்-யுடன் ஆர்.ஜே.பாலாஜியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கும் இயக்குனர் சரவணராஜன், ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்ததும் படத்தின் ஹீரோயின், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்! இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்குள் துவங்கவிருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திரி - டிரைலர்


;