சூர்யா விழாவில் நாகார்ஜுனா!

சூர்யா விழாவில் நாகார்ஜுனா!

செய்திகள் 31-Jul-2014 10:34 AM IST Chandru கருத்துக்கள்

சூர்யா பிறந்தநாளை ஒட்டி வெளியான ‘அஞ்சான்’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு ‘அஞ்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸரும் கிட்டத்தட்ட 30 லட்சம் ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. இந்நிலையில் ‘அஞ்சான்’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘சிக்கந்தர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை ஹைதராபாத்தில் உள்ள ஷில்பரலா வேதிகா அரங்கத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும் சூர்யாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால், இந்த விழாவை மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன ‘திருப்பதி பிரதர்ஸ்’, ‘யுடிவி’ நிறுவனங்கள்.

‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளாத படத்தின் நாயகி சமந்தா, அனேகமாக இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இவ்விழாவில் படத்தின் நாயகன் சூர்யாவுடன் நடிகர் நாகார்ஜுனா, இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, வி.வி.வினாயக் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

லிங்குசாமி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. ‘ரெட் டிராகன்’ கேமராவை அறிமுகம் செய்து ஒளிப்பதிவு செய்திருப்பவர் சந்தோஷ் சிவன். சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கியுள்ள ‘அஞ்சான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;