17 படங்களுக்கு ‘யு’ சர்டிஃபிகேட் பெற்ற இயக்குனர்!

17 படங்களுக்கு ‘யு’ சர்டிஃபிகேட் பெற்ற இயக்குனர்!

செய்திகள் 31-Jul-2014 10:12 AM IST Inian கருத்துக்கள்

விசுவுக்கு அடுத்தபடியாக அநேக குடும்பக்கதைகளை எடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் வி.சேகர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இவரது படங்கள் விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது. இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இவர் இதுவரை இயக்கிய 17 படங்களுக்கும் ‘யு’ சர்டிஃபிகெட் தான்! தற்போது வி.சேகர் தன்னுடைய மகனை வைத்து, ‘சரவண பொய்கை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்றைய இளைய தலைமுறையினரை கருத்தில் கொண்டு அவர்கள் ரசிக்கும் படியான கதையாக எடுத்திருக்கிறார்.

வி.சேகரின் மகன் கார்ல்மாக்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்துள்ளார். இவருக்கு இணையாக அருந்ததி நடித்துள்ளார். விவேக், கருணாஸ், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி உட்பட பல காமெடி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மணல்கயிறு 2 - டிரைலர்


;