அதர்வாவின் ‘சிக்ஸ்பேக்’ ரகசியம்!

அதர்வாவின் ‘சிக்ஸ்பேக்’ ரகசியம்!

செய்திகள் 31-Jul-2014 9:34 AM IST Chandru கருத்துக்கள்

ஒரே நாளில் மொத்த கோலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. ‘பரதேசி’ தந்த உற்சாகத்தில் அடுத்தடுத்து நான்கு படங்களை கையில் வைத்திருக்கும் அதர்வா, தான் நடிக்கும் ‘ஈட்டி’ படத்திற்காக தற்போது ‘சிக்ஸ்பேக்’ இளைஞனாக பார்ப்பவர்களை மிரளச் செய்கிறார். இந்த சிக்ஸ்பேக் உடலமைப்பைப் பெறுவதற்காக அதர்வா என்னென்ன கஷ்டங்களை அனுபவித்துள்ளார் தெரியுமா?

‘ஈட்டி’ படத்தில் தடகள வீரனாக அதர்வா நடிப்பதால், உண்மையிலேயே அத்லெட்டில் கலந்து கொள்பவர்களின் உடலமைப்பு எப்படி இருக்குமோ அப்படி தன் உடம்பை மாற்ற நினைத்திருக்கிறார் அதர்வா. அதனால் கடுமையான ‘டயட்’டில் இருந்து தினமும் ஜிம்மே கதியென்று இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக அரிசி உணவையே சுத்தமாக தவிர்த்து வந்த அதர்வாவின் உணவுகள் எவை தெரியுமா?

வேக வைத்த காய்கறிகள், உப்பு, சர்க்கரை இல்லாத உணவுகள், பழங்கள், எண்ணெய் இல்லாத மீன், சிக்கன் இவற்றைத்தான் உண்டு வந்திருக்கிறார். மூன்று மாதங்கள் டயட்டில் இருந்து, கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால்தான் சிக்ஸ்பேக் வடிவமே கிடைக்குமாம். ஆனால், இரண்டு நாட்கள் எதைப்பற்றியும் கவலையில்லாமல் கண்டதையும் சாப்பிட்டால், உடனே அது கரைந்துவிடுமாம். இதனால் கடந்த ஒரு வருட காலமாக தவம்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் அதர்வா. ஆனால், இப்போது இந்த வாழ்க்கை முறை அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டதாகவும் சொல்கிறார் அதர்வா.

தற்போது, ‘ஈட்டி’ படத்தில் தடகள வீரனாகவும், ‘இரும்புகுதிரை’ படத்தில் பைக் ரேஸராகவும், ‘கணிதன்’ படத்தில் பத்திரிகை நிருபராகவும் நடித்துக் கொண்டிருக்கும் அதர்வா விரைவில் பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கணிதன் - யப்பா சப்பா மேக்கிங் வீடியோ


;