வில்லனாகிறார் அரவிந்த்சாமி!

வில்லனாகிறார் அரவிந்த்சாமி!

செய்திகள் 30-Jul-2014 12:41 PM IST inian கருத்துக்கள்

ரொமான்டிக் ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் படம் ‘தனி ஒருவன். ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கும் இப்படத்தை இயக்குபவர் ‘ஜெயம்’ ராஜா. இப்படத்தை ‘ஏ.ஜி.எஸ்.’ நிறுவனம் தயாரிக்கிறது. மணிரத்னம் மூலம் ‘ரோஜா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. ‘சாசனம்’ படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் இருந்த அரவிந்த்சாமியை ‘கடல்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வைத்தார் மணிரத்னம். அதன் பிறகு இப்போது ‘தனி ஒருவன்’ படத்தின் கதையில் முக்கியத்துவம் வாய்ந்த, மிரட்டும் வில்லனாக நடிக்கிறார் அரவிந்தசாமி. இந்தப் படம் தவிர, பாலிவுட் இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;