ஸ்ரீஜாவை அழ வைத்த செந்தில்!

ஸ்ரீஜாவை அழ வைத்த செந்தில்!

செய்திகள் 30-Jul-2014 11:14 AM IST Inian கருத்துக்கள்

முக்கியமான ஒரு சமூக பிரச்சனையை மைய்யமாகக் கொண்டு ‘ஆதர்ஷ் ஸ்டுடியோ’ தயாரித்துள்ள படம் ‘வெண்நிலா வீடு’. அதிரடி விளம்பர யுக்திகள் மூலம், பல படங்களை வெற்றிபெறச் செய்த நிறுவனம் ‘வைப்ரண்ட் மூவீஸ்’. இந்நிறுவனம் முதன் முதலாக ‘வெண்நிலா வீடு’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் விநியோகத்திலும் நுழைந்துள்ளது. இப்படத்தில் ‘மிர்ச்சி’ செந்தில், விஜயலட்சுமி, ஷ்ருந்தா, பிளாக் பாண்டி ஆகியோர் நடித்துள்ளனர். வெற்றிமகாலிங்கம் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறியதாவது, ‘‘விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு என்று சொன்ன காலம் முடிந்து, தற்போது நடுத்தர வர்க்கம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று அறிவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. உழைப்பில் தன்னை கரைத்துக்கொண்டு குடும்ப பொருளாதாரத்தையும் உயர்த்தும் இன்றைய நடுத்தர குடும்பங்களின் வாழ்வுதான் வெண்நிலா வீடு. இப் படம் வெளியான பிறகு விஜயலட்சுமிக்கு பெண்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்து தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை கைப்பற்றுவார்’. இதுவரை யாரும் கவனம் செலுத்தாத சமூக பிரச்சனையை இந்தப் படத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் பாராட்டி இப்படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகெட் வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் தமிழக அரசின் வரிச் சலுககை குழுவினரும் படம் பார்த்து நெகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.

சமீபத்தில் திருமணமான ‘மிர்ச்சி’ செந்தில் தன் மனைவி ஶ்ரீஜா சந்திரனுடன் படம் பார்த்தார். படத்தின் இறுதி காட்சியில் தன் கணவனின் நடிப்பினை பார்த்து கண்ணீர் விட்டு தோளில் சாய்ந்தாராம் ஸ்ரீஜா சந்திரன். ஆகஸ்டில் இப்படம் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருத்தாச்சலம் - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;