ரஜினி பாடிய ‘காசு பணம் துட்டு மணி மணி…’

ரஜினி பாடிய  ‘காசு பணம் துட்டு மணி மணி…’

செய்திகள் 30-Jul-2014 10:51 AM IST VRC கருத்துக்கள்

ரஜினியுடன் நடிக்கும் அனைவருக்கும் அவரது பழகும் விதமும், அவரது எளிமையும், மனிதநேயமும் ரொம்பவும் பிடிக்கும். இதனால் ரஜினியுடன் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் ரஜினி பற்றி சொல்ல ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்கும். ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் அவருடன் நடித்து வருகிறார் ‘சூது கவ்வும்’ புகழ் கருணா! ரஜினியுடன் நடித்த அனுபவத்தை பற்றி கருணா கூறும்போது, ‘‘முதல் நாள் ரஜினி சாருடன் நடிக்கும்போது நான் கொஞ்சம் பதற்றப்பட்டேன். ரஜினி சார் என்னை பார்த்ததும், ‘சூது கவ்வும் படத்தில்’ வரும் ‘காசு பணம் துட்டு மணி மணி…’ என பாடியவாறே என அருகில் வந்து என்னை என்கரேஜ் பண்ணினார். அத்துடன் நான் நடிப்பதை பார்த்து ‘சூப்பரா பண்றாரு’ன்னும் அவர் சொல்லியிருக்கிறார். ரஜினி சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;