சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சமுத்திரக்கனி!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சமுத்திரக்கனி!

செய்திகள் 30-Jul-2014 10:46 AM IST VRC கருத்துக்கள்

சூப்பர் ஹிட்டான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனும், இயக்குனர் பொன்ராமும் மீண்டும் கூட்டணி அமைத்து உருவாக்கி வரும் படத்திற்கு 'ரஜினி முருகன்' என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாவது வார்த்திலிருந்து துவங்கவிருக்கிறது. இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பவர்ஃபுல் வில்லன் கேர்கடரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டாகியுள்ள தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் அப்பாவாக நடித்த சமுத்திரக்கனி, இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறார். மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் படமாகவிருக்கும் இப்படத்தில் ராஜ்கிரணும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறாராம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திறகு இசை அமைத்த டி.இமான் தான் இப்படத்திற்கும் அசை அமைப்பாளர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;