3 மாதம் 3 படம்!

3 மாதம் 3 படம்!

செய்திகள் 29-Jul-2014 2:59 PM IST VRC கருத்துக்கள்

தற்போது அதிக படங்களை கையில் வைத்துக் கொண்டு படு பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ப்ரியா ஆனந்தும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘அரிமா நம்பி’. இப்படத்தை தொடர்ந்து பிரியா நடிப்பில் வரிசையாக 3 படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அதில் முதல் படமாக அதர்வாவுடன் நடித்துள்ள ‘இரும்புக்குதிரை’ வரவிருக்கிறது. இப்படம் இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விமல், சூரியுடன் நடித்துள்ள ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படம் வெளியாகவுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக கௌதம் கார்த்திக்குடன் நடித்து வரும் ‘வை ராஜா வை’ படம் செப்டம்பர் மாத வெளியீடாக வரவிருப்பதாக கூறப்படுகிறது! இப்படி வரிசையாக 3 மாதங்களில் 3 படங்கள் ரிலீசாகவிருப்பதில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரியா ஆனந்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;