பேரணியில் இணையும் விஜய்சேதுபதி, காயத்ரி, வரலட்சுமி!

பேரணியில் இணையும் விஜய்சேதுபதி, காயத்ரி, வரலட்சுமி!

செய்திகள் 29-Jul-2014 2:21 PM IST VRC கருத்துக்கள்

இந்த பூமியில் பிறக்கும் 3000 குழந்தைகளில் ஒரு குழந்தை தசைச் சிதைவு (Mayo rally) நோயால் பாதிக்கப்படுகிறது என்று ஒரு புள்ளி விவர கணக்குக் கூறுகிறது. இத்தகைய நோய் இனி எந்தக் குழந்தைக்கும் வரக்கூடாது என்ற நோக்கத்துடன், மக்களிடத்தில் இந்த நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பேரணிய நடத்தவிருக்கிறது சென்னையில் செயல்பட்டு வரும் ஜீவன் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை பின்புறத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு இப்பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் பங்கேற்க அவர்களுடன் நடிகர் விஜய்சேதுபதி, நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், காயத்ரி ஆகியோரும் கலந்து கொண்டு இந்நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர்! இந்தப் பேரணியில் ஏராளமான பொது மக்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;