சேரனின் நேற்றைக்கு மழை பெய்யும்!

சேரனின்  நேற்றைக்கு மழை பெய்யும்!

செய்திகள் 29-Jul-2014 12:30 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் ஒரு ஆடியோ விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, தான் இரண்டு ஆண்டுகளில் 3 படங்களை இயக்கப் போவதாக கூறியிருந்தார். இப்போது அதில் ஒரு படத்தின் வேலைகளையும் துவங்கி விட்டார் பாரதிராஜா! இந்தப் படத்தில் கதையின் நாயகனாக சேரன் நடிக்க, படத்திற்கு ‘நேற்றைக்கு மழை பெய்யும்’ என்று டைட்டில் வைத்துள்ளார் பாரதிராஜா. இதன் கதையை இயக்குனர் அகத்தியன் எழுதியுள்ளாராம். இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் இப்போது மும்முரமாக இருந்து வரும் பாரதிராஜா, அந்த வேலை முடிந்ததும் கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து, உடனே படப்பிடிப்பிலும் இறங்கவுள்ளாராம். ‘அன்னக்கொடி’ படத்திற்குப் பிறகு பாரதிராஜா இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;