வட மலேசியாவில் படம் பிடிக்கப்பட்ட ‘8 எம்.எம்’

வட மலேசியாவில் படம் பிடிக்கப்பட்ட ‘8 எம்.எம்’

செய்திகள் 29-Jul-2014 11:06 AM IST Inian கருத்துக்கள்

‘மைன்ட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ்’, ‘கெய்கர் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் படம் '8MM' .இப்படத்தை மலேசியாவில் பல படங்கள் இயக்கியுள்ள அமின் இயக்கியுள்ளார். நாயகனாக நிர்மல், புதுமுகம் திவ்யா நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, மலேசியாவில் நடந்துள்ளது. '8எம் எம்' படம் குறித்து தயாரிப்பாளர் ஜெய ராதாகிருஷ்ணன் பேசும்போது,

‘‘சினிமா மீது எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. அப்படிப்பட்ட எனக்கு சினிமாவைச் சேர்ந்த அமினின் நட்பு கிடைத்தது. சினிமா பற்றி அவர் பேசியபோது இது நமக்கு சரிப்பட்டு வருமா என்று நினைத்தேன். அமின் சொன்ன கதை பிடித்திருந்தது. இந்த காலகட்டத்துக்கு ஏற்ற கதை. அவர் பல டெலிஃபிலிம்ஸ் மலேசியாவில் எடுத்தவர். அமினின் திறமை மீதும் அனுபவத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. படத்தை தொடங்கினோம். முடித்து விட்டோம்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பல பகுதிகளில் நடந்திருக்கிறது. மலேசியாவிலும் நடந்திருக்கிறது.பொதுவாக மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு வந்தால் அங்குள்ள இரட்டை கோபுரம், ஹைவே, பார்க் என்றுதான் எடுப்பார்கள். நாங்கள் வட மலேசியா பகுதியைச் சேர்ந்தவர்கள். வட மலேசியா என்றால் வரலாற்றில் கடாரம் என்பார்கள்.

10-11 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் அரசர்கள் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் தமிழர்கள் வியாபரரம் செய்த பகுதி அது. அந்தக் கடாரம் இன்று ஷண்டி எனப்படுகிறது. அந்தக் கடாரம் பகுதியில்தான் '8எம் எம்' படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். வரலாற்றுப் பகுதியில் நடந்ததால் இது வரலாற்றுப் படமல்ல. விறு விறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர். மலேசியாவிலிருந்து வந்து படம் தயாரித்து இருக்கிறோம். இப்படத்தை வெற்றி பெறவைக்க ஆதரவு தந்து உதவுங்கள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;