பார்த்திபனின் 'KTVI' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பார்த்திபனின் 'KTVI' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 29-Jul-2014 10:39 AM IST VRC கருத்துக்கள்

பார்த்திபன் இயக்கி, தயாரித்துள்ள ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தை ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தார் பார்த்திபன். ஆனால் அன்று ‘ஜிகர்தண்டா’, ‘சரபம்’ முதலான படங்கள் ரிலீஸாகவிருப்பதால் பார்த்திபன் தனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார். இப்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை ஆக்ஸ்ட் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் பார்த்திபன். அதன் விவரம் வருமாறு:

ரமலான் வாழ்த்துக்கள்!

இடைவெளி என்ற வார்த்தையும்
இரு வெளி-களை, ‘இ’ என்ற எழுத்தின் மூலமும்,
‘ளி’ என்ற எழுத்தின் மூலமும்,
இணைக்கும் ஒரு மௌனப் பாலம் தானே?

#KTVI சிறிய இடைவெளிக்கு பின் ஆகஸ்ட் 29 அன்று வெற்றிகரமாய் வெளியாகி வெற்றியாகும் உங்கள் வாழ்த்துக்களோடு… ,

முதல் தேதிக்கு வெளியாகும் ‘ஜிகர்தண்டா’, ‘சரபம்’ படங்களை வாழ்த்தி வழிவிட்டு சற்றே தள்ளி வருகிறது. இப்படி அனுசரித்து போகும் அணுகுமுறை அவசியப்படுகிறது சினிமா வர்த்தகத்தில். ஆனால் அனைத்து திரையரங்குகளையும் முன் கூட்டியே முடிவு செய்ய முடிவதில்லை. எனவே மற்ற தயாரிப்பாளர்களும் இதை அறிவிக்கப்பட்ட தேதியாக முடிவு செய்து நம் படத்திற்கு முன்னுரிமை தருவார்கள் என நம்புகிறேன்.

உங்கள் பாராட்டிற்காக # KTVI…!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;