அஜித் படத்தில் விஜய்!

அஜித் படத்தில் விஜய்!

செய்திகள் 28-Jul-2014 4:25 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் வில்லனாக அருண் விஜய், இன்னொரு முக்கிய கேர்கடரில் தேவி அஜித், அஜித்- த்ரிஷாவின் மகளாக அனிகா என்ற குழந்தை நட்சத்திரம் அகியோரும் நடிக்க, இப்போது இவர்களுடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் ‘தலைவாசல்’ விஜய்யும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்கு முன் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘காதல் கோட்டை’ படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் ‘தலைவாசல்’ விஜய் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அஜித் படத்தில் நடிக்கிறார் (தலைவாசல்) விஜய்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;