தனுஷ் படத்திற்கு எதிராக திடீர் போர்க்கொடி!

தனுஷ் படத்திற்கு எதிராக திடீர் போர்க்கொடி!

செய்திகள் 28-Jul-2014 11:47 AM IST Chandru கருத்துக்கள்

தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளியாகி 10 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறது தமிழ்நாடு புகையிலை தடுப்பு இயக்கம். ‘‘தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் புகையிலைக் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார். அதைவிட இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் எப்படி ‘யு’ சான்றிதழ் அளித்தார்கள் என்று தெரியவில்லை. அதுமட்டுமன்றி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்களுக்கும் அனுமதி அளித்திருக்கிறார்கள். தமிழக அரசு உடனடியாக தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் மற்றும் விளம்பர பொருட்களை நீக்க வேண்டும்’’ என்று இந்த இயக்கம் தெரிவித்துள்ளது. அதோடு இவ்விஷயத்தை தமிழ்நாடு சுகாதார அமைப்பு மற்றும் மத்திய திரைப்பட தணிக்கைகுழுவுக்கும் கொண்டு சென்றிருப்பதாகவும் அந்த அமைப்பில் உள்ள சிலர் தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பாடல் வீடியோ


;