‘இரும்பு குதிரை’க்காக இத்தாலிக்குப் பறந்த அதர்வா!

‘இரும்பு குதிரை’க்காக இத்தாலிக்குப் பறந்த அதர்வா!

செய்திகள் 28-Jul-2014 10:51 AM IST Chandru கருத்துக்கள்

அதர்வா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘பரதேசி’க்குப் பிறகு, மீண்டும் அவருடைய நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கிறது ‘இரும்பு குதிரை’. ‘ஈரம்’, ‘வல்லினம்’ படங்களின் இயக்குனர் அறிவழகனின் உதவியாளர் யுவராஜ் இயக்கும் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். அதோடு ராய் லக்ஷ்மி, ‘ஏழாம் அறிவு’ புகழ் ஜானி நியூ ட்ரியன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘பைக் ரேஸை’ மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் காதல் படமாம் இது. இப்படத்தில் பைக் ரேஸராக நடிப்பதற்கு முன்பு, இத்தாலிக்குச் சென்று பைக் ரேஸ் சம்பந்தப்பட்ட கோர்ஸ் ஒன்றை 18 நாட்கள் கற்றுக்கொண்டு திரும்பினாராம் ஹீரோ அதர்வா. இதனால் இப்படத்தின் சில முக்கியமான காட்சிகளில் கூட ‘டூப்’ எதுவும் போடாமல் ‘ரிஸ்க்’ எடுத்து நடித்துக் கொடுத்துள்ளாராம் அதர்வா.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ், கோபி அமர்நாத் ஆகியோர் கவனிக்க, ஐந்து சூப்பரான பாடல்களை உருவாக்கியிருக்கிறாராம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;