ஜனனி, பார்வதி எடுத்த அதிரடி முடிவு!

ஜனனி, பார்வதி எடுத்த அதிரடி முடிவு!

செய்திகள் 28-Jul-2014 10:46 AM IST VRC கருத்துக்கள்

நடிகை லட்சுமி ராய் தனது பெயரை ‘ராய் லட்சுமி’ என்று கொஞ்சம் மாற்றி வைத்தது மாதிரி, இப்போது நடிகை ஜனனி ஐயரும் அதிரடியாக தனது பெயரில் ஒரு சின்ன மாற்றத்தை செய்துள்ளார். இனி இவரது பெயர் வெறும் ஜனனி மட்டும் தானாம்! ஐயர் என்ற ஜாதி பெயர் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் இப்படி கூறியிருக்கிறார். ‘‘எனது பெயரிலுள்ள ஐயர் பெயரை எடுத்து விட்டதற்கு முக்கிய காரணம் எதுவும் இல்லை. ‘தெகிடி’ படத்திற்கு முன் நான் நடித்த எல்லா படங்களின் டைட்டில் கார்டிலும் ‘ஜனனி ஐயர்’ என்று தான் வரும். ஆனால், ‘தெகிடி படத்தின் டைட்டில் கார்டில் வெறும் ஜனனி என்று தான் போட்டிருந்தார்கள்! ஒரு வகையில் அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது மட்டுமல்லாமல் ‘தெகிடி’ படம் வெற்றிப் படமாகவும் அமைந்ததால் இனி நிரந்தரமாக அந்த பெயரே இருக்கட்டும் என்று விரும்பினேன். அவ்வளவு தான்’’ என்கிறார்.

இதைப் போல ‘பூ’ மற்றும் ‘மரியான்’ போன்ற பல படங்களில் நடித்த, பார்வதி மேனனும் தனது பெயரிலுள்ள ஜாதி பெயரான மேனனை தவிர்த்துள்ளார். இனி என்னை யாரும் பார்வதி மேனன் என்று அழைக்கவோ, எழுதவோ வேண்டாம்! வெறும் பார்வதி என்ற பெயரில் அறியப்படவே விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, தங்களது பெயர்களிலுள்ள ஜாதி பெயர்களுக்கு ‘குட்பை’ சொல்லியிருக்கிறார்கள் ஜனனியும், பார்வதியும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;