‘விஐபி’ வெற்றியால் ரிலீஸ் தள்ளும் படங்கள்!

‘விஐபி’ வெற்றியால் ரிலீஸ் தள்ளும் படங்கள்!

செய்திகள் 28-Jul-2014 10:42 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த 18ஆம் தேதி வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் மாபெரும் வெற்றியோடு தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான முதல் மூன்று நாட்களில் 12 கோடி ரூபாயை வசூல் செய்த இப்படம், வார இறுதியில் கிட்டத்தட்ட 19 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகக் கூறுகிறார்கள். இப்படத்தின் வெற்றியால் கடந்த 25ஆம் தேதி வெளியாகவிருந்த ‘ஜிகர்தண்டா’ படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் கதிரேசன் அறிவித்தார். இதனால், ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாவதாக இருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு வேறொரு ரிலீஸ் தேதியை யோசித்து வருவதாக தற்போது பார்த்திபன் ட்வீட் செய்திருக்கிறார். தொடர்ந்து இரண்டாவது வாரமும் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் அதே எண்ணிக்கையிலான தியேட்டர்களில் திரையிடப்படுவதால் மத்த படங்களுக்கான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு சில படங்கள் தங்களின் ரிலீஸ் தேதியை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;