தனுஷுக்கு இன்று பிறந்த நாள்!

தனுஷுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 28-Jul-2014 10:14 AM IST VRC கருத்துக்கள்

இன்றைய தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு கலைஞன் தனுஷ்! நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என பல அவதாரங்களுடன் சினிமாவில் பயணித்து வரும் இவரது 25-ஆவது படமாக சமீபத்தில் வெளிவந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இவர் நடிப்பில் இதற்கு முன் வெளியான ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக மகிழ்ச்சியை தாராத நிலையில், அதற்கு வட்டியும், முதலுமாக ‘வேலையில்லா பட்டதாரி’ உலகம் முழுக்க வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷ தருணத்தில், தனுஷ் தற்போது நடித்து வரும் படங்கள் ‘அனேகன்’ மற்றும் ‘ஷமிதாப்’ ஹிந்திப் படம். அடுத்தடுத்து வெற்றியை கொடுக்கும் வகையில் இப்படங்களும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. தனது 25 ஆவது படம் தந்த மாபெரும் வெற்றியுடனும், மகிழ்ச்சியுடனும் இன்று பிறந்த நாள் காணும் தனுஷுக்கு ‘டாப் 10 சினிமா’ தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;